வவுனியாவில் விடுதியில் தங்கியிருந்த நபர் திடீர் மரணம்..! கொரோனா என சந்தேகம்..!!

வவுனியாவில் விடுதியில் தங்கியிருந்த நபர் மரணம்….

வவுனியா நண்பருடன் விடுதியில் தங்கியிருந்த நபர் திடீரென இறந்த சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

வவுனியா முதலாம் குறுக்கு தெருவிலுள்ள கௌரி விடுதியில் தெகிவளையை சேர்ந்த ஒருவரும் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் என இரு நண்பர்களும் ஒன்றாக தங்கியிருந்திருக்கின்றார்கள்.

இதன் போது கொழும்பு தெகிவளையில் இருந்து வருகைதந்து தங்கியிருந்தவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டதையடுத்து கௌரி விடுதிக்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் விடுதியில் வந்து தங்கியிருக்கின்றார்கள்.

இதன் பின்னர் இவர்கள் விடுதியில் தங்கியிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென மயக்கமுற்று தெகிவளையை சேர்ந்த குறித்த நபர் கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் 1990 இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மயக்கமுற்றவரை வைத்தியசாலைக்கு மற்றைய நண்பன் கொண்டு சென்றிருக்கிறார். குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முன்னரே இறந்துள்ளதாக வைத்தியசாலையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கொழும்பு தெகிவளையை சேர்ந்த 48 வயது ஜெகநாதன் உதயராஜ் என்பவரே மரணமடைந்துளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த நபர் திடீரென எவ்வாறு இறந்தார்? இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் மரணித்தவருக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக குறித்த நபரின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.