இந்தியா..
இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேசத்தின் பாதோகி பகுதியில் பணம் வாங்க வந்த ஒருவர் 30 வயதான திருமணமான பெண்ணை அவரின் கணவர் இல்லாத நேரத்தில் பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்ணின் கணவரிடம் விற்பனை செய்த நெல்லுக்காக பணத்தை வாங்குவதற்காக அந்த நபர் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது அப்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாததால் சமையம் பார்த்து அவரின் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது தன்னுடைய புகார் மனுவை காவல் அதிகாரிகள் கிழித்தெறிந்ததாக அப்பெண் கூறியுள்ளார்.
இதனால் அந்த பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சென்று முறையிட்டு தனக்கு உரிய நீதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதன் பின்னர் குறித்த நெல் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.