கணவனை விட்டு காதலனுடன் வாழ்ந்த பெண்.. இறுதியி நடந்த கோர சம்பவம்..!!

இந்தியாவில்…

இந்தியாவில் திருவள்ளூர் அருகே கணவனை விட்டு தனியாக வாழ்ந்த பெண் வேறொருவருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் கொலையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது கணவனை விட்டுவிட்டு காதலனுடன் குடும்பம் நடத்தி வந்த இளம்பெண் வேறொரு வாலிபருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதால் கடுப்பான காதலன் அப்பெண்ணை துடிதுடிக்க கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மென்னவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி பிரியங்கா. கார்த்திக் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் பிரியங்காவுக்கும், திருவாலங்காடு அடுத்த நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் ராஜ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் திருமண உறவை மீறிய பழக்க ஏற்பட்டு கார்த்திக் இல்லாத நேரங்களில் உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கார்த்திக்கிற்கும், பிரியங்காவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, தனது தோழியான பவித்ராவின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு பிரியங்கா வீட்டைவிட்டு சென்றுள்ளார். ஆனால், சில நாட்கள் ஆகியும் பிரியங்கா வீடு திரும்பவில்லை. மேலும், அவர் பவித்ராவின் வீட்டுக்கு செல்லவில்லை எனவும் தெரிய வந்தது. இதற்கிடையில், பிரியங்கா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார் ராஜ்குமார்.

சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் பிரியங்காவின் சடலத்தை ஆய்வு செய்துவிட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பிரியங்காவுக்கும், ராஜ்குமாருக்கும் என்ன சம்மந்தம் என்ற கோணத்தில் விசாரணையை துவக்கினர். அப்போது, ஏற்கனவே திருமணமான பிரியங்காவுக்கும், ராஜ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டதையும், இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை நடந்து வந்ததையும் பிரியங்காவின் தோழி பவித்ரா போலீசாரிடம் தெரிவித்தார்.

அதனையடுத்து, ராஜ்குமாரை குடுக்குபிடியில் விசாரித்தபோது உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது, சம்பவத்தன்று கணவனுடன் கோபித்துக்கொண்டு வெளியேறிய பிரியங்கா, ராஜ்குமாரிடம் தஞ்சம் அடைந்தார். இருவரும் திருவாலங்காட்டில் உள்ள ஒரு வீட்டை வாடகை எடுத்து குடும்பம் நடந்து வந்துள்ளனர். அப்போது, பிரியங்காவும் வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை கண்டித்தபோது பிரியங்காவுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால், பிரியங்கா அங்கிருந்து தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதனையடுத்து, பிரியங்காவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்த ராஜ்குமார், குளிர்பானத்தில் விஷத்தை கலந்து அதனை வலுக்கட்டாயமாக பிரியங்காவின் வாயில் ஊற்றியுள்ளார். கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த பிரியங்காவால் அதில் இருந்து தப்ப இயலவில்லை. இந்நிலையில், சிறிது நேரத்தில் பிரியங்கா உயிரிழந்துவிட, காவல் நிலையத்துக்கு போன் செய்து பிரியங்கா த ற் கொ லை செய்துகொண்டதாக ராஜ்குமார் நாடகம் ஆடியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது கொலை வழக்கை பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.