காதலனுக்கு வேறொரு பெண்னுடன் நிச்சயமான திருமணம்..! திருமண மண்டபத்தில் காதலியின் அதிரடியான நடவடிக்கையால் பரபரப்பு…!!

சென்னை..

சென்னையில் காதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை மண்டபத்திற்கு நுழைந்து கடைசி நேரத்தில் காதலி கட்டுவதை தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காதலனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அந்த பெண் திருமண மேடையில் பலருக்கும் காட்டி காதலனின் முகத்திரையை கிழித்து திருமணத்தை தடுத் நிறுத்தினார்.

ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்ய காதலன் மறுத்துவிட்டதால் சிறையில் கம்பி எண்ணுகிறார்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் வசிப்பவர் கணேசன் (30). இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர், மின்சார ரயிலில் சென்று வரும்போது, அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் பழகி உள்ளார்.

அவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவ்வப்போது இருவரும் செல்போனில் பேசியும், அடிக்கடி தனிமையில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், கணேசனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இதனை அடுத்து வில்லிவாக்கத்தில் அதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு பெற்றோரும் தடபுடலாக ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.

திட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை கல்யாணம் நடைபெற இருந்தது. அதற்கான வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த காதலி உடனே, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார், இளம்பெண்ணுடன் நேற்று காலை திருமண மண்டபத்துக்கு சென்றார்கள் அங்கிருந்த கணேசனின் உறவினர்களிடம், அவரது காதல் விவகாரத்தை இளம்பெண் தெரிவித்தார். மேலும் கணேசனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் அந்த இளம்பெண் காட்டியிருக்கின்றார்.

இதன் பின்னர் போலீசார் திருமணத்தை நிறுத்தினர். இரு வீட்டாரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது கணேசன், காதலியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். காதலி அரக்கோணத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார், அரகோணம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். திருமணத்திற்கு மறுத்த காதலன் கணேசன் தற்போது சிறையில் உள்ளார்.