திருமண ஆசையில் இளைஞன் செய்த கொடூர கொலைகள்..! உத்தரபிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம்..!!

இந்தியா..

இந்தியாவில் இளைஞன் ஒருவரை திருமணம் செய்ய மறுத்ததால் 19 வயது பெண்ணையும் அவரது தாயையும் வீட்டில் வைத்த வாலிபர் ஒருவர் கொ லை செய்த கொடூர சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வந்துள்ளார்.

இந்த விடயம் இரண்டு வீட்டாருக்கும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக இரு குடும்பங்களும் இடையே கடந்த நாட்களாக தொடர்ந்து சண்டை நடைபெற்றுள்ளது. மேலும், அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரை வேறு ஒருவருக்கு நிச்சயம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.


அதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், நேற்றிரவு அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கொடூரமாக வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.
அவர்களைக் காப்பாற்ற வந்த உறவினர் பெண்ணையும் அந்த நபர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர், தற்போது சிகிச்சையாக உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.