பிரிய மனம் இல்லாத காதல் ஜோடி…கைகளைக் கட்டிக்கொண்டு ஆற்றில் விழுந்து த ற் கொ லை..!!

தமிழ்நாடு…

தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் இவரது மனைவி சுமதி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது சேகர் ஆட்டையாம்பட்டியில் உள்ள மறுளையம்பாளையத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

திருச்செங்கோடு சேர்ந்தவர் கோபால் இவரது மனைவி கோமதி இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது இந்த நிலையில் கணவரோடு சண்டை போட்டுக்கொண்டு கோமதி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக கூறபடுகிறது இதனால் காளிப்பட்டி அருகே உள்ள தாய் வீட்டில் வசித்து வந்த கோமதி அடிக்கடி சேகர் வேலை செய்யும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவது வழக்கம் இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது இதனால் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் சேகரின் மனைவிக்கு தெரிய வரவே தட்டிக்கேட்ட சேகரின் மனைவி அவரைவிட்டு பிரிந்து உள்ளார் இதனால் மன வருத்தத்தில் இருந்த சேகர் கடந்த மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என குறிப்பிடுகிறது

பல இடங்களில் தேடியும் கணவர் இல்லாத்தால் இதுகுறித்து சேகரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் ஆண் பெண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று பார்த்த போது காணாமல் போன சேகரும் அவரது கள்ளக் காதலியும் கைகளைக் கட்டிக்கொண்டு பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்

இதனையடுத்து இருவரின் பிரேதத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். கள்ளக்காதல் பிரச்சினையில் இருவரும் பிரிய முடியாமல் தங்களது கைகளை கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து தற் கொ லை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.