மலை அடிவாரத்தில் சிறுமியுடன் குடித்தனம் நடத்திய நபர்..! அதிர்ச்சியில் 2 மனைவிகள்..!!

இந்தியா…

திருநெல்வேலி மாவட்டம் பணங்குடி பகுதியில் வசிக்கின்ற ஸ்டீபன். இவருக்கு முன்னறே திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்தி வந்த ஸ்டீபன் அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு பள்ளி மாணவியுடன் பேசி வந்துள்ளார். அப்போது, சிறுமிக்கு திருமண ஆசையை காட்டி காதலில் வீழ்த்தியுள்ளார் ஸ்டீபன்.

சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற சிறுமி மலை வீடு திரும்பவில்லை. பதட்டமான பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்துவிட்டு அக்கம்பக்கத்தில் தேட தொடங்கினர். ஆனால், சிறுமி எங்கும் அகப்படாததால் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில் காணாமல் போன மாணவிக்கும், ஸ்டீபனுக்கும் இடையே இருந்த பழக்கம் தெரிய வந்தது. மேலும், முன்பு ஒருநாள் ஸ்டீனிடம் பழகுவது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தபோது, மகளை கண்டித்துள்ளனர். இந்நிலையில்தான், சம்பவத்தன்று மாணவியும், ஸ்டீபனும் வீட்டை விட்டு ஓடிவிட்டதை போலீசார் உறுதி செய்தனர்.

தொடர்ந்து இருவரையும் தேடி வந்ததில், நாகர்கோவில் மலை அடிவாரத்தில் ஸ்டீபன் இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். மேலும், சிறுமியுடன் அந்த பகுதியில் ஸ்டீபன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியாய் வந்தது. இதையடுத்து ஸ்டீபன் மீது போக்ஸோ வழக்கை பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஏற்கனவே இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்தி வந்த நபர் பள்ளி சிறுமியுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.