யூட்யூப்பில் வைரல் ஆவதற்கு தனது அந்தரங்க உறுப்பை வெட்டி எறிந்த இளைஞன்..!

இளம் ஆசிரியரின் விபரீத முடிவு..

சமூக வலைதளங்களில் வித விதமான சவால்கள் டிரெண்ட் ஆவதை பார்த்திருப்போம். ஆனால், அண்மையில் கொடூரமான சவால்கள் டிரெண்ட் ஆகி வருவதாக தெரிகிறது.

சமூக வலைதள சேலஞ்சுக்காக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது ஆணுறுப்பை வெட்டி வீசியுள்ளார். ஸ்பெயினை சேர்ந்த ரேப் கலைஞர் ஆரோன் பெல்ட்ரன். இவர் யூட்யூபில் வைரலாகும் வகையில் வித்தியாசமான சேலஞ்ச் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார்.

இவரது ஆணுறுப்பை வெட்டி அந்த வீடியோவை பதிவேற்றலாம் எனவும், வீடியோ குறிப்பிட்ட அளவு வியூஸ் பெற்ற பிறகு அதற்கு ஏற்ப 200 யூரோ (ரூ.17,500) முதல் 2,500 யூரோ (ரூ.2,19,843) வரை பணம் வழங்குவதாகவும் அவரது நண்பர் சவால் விடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, தனது ஆணுறுப்பை வெட்ட சம்மதம் தெரிவித்துள்ளார் ஆரோன் பெல்ட்ரன். இதுமட்டுமல்லாமல், வீடியோ வைரலாகிவிட்டால் அதன் மூலம் நிறைய பணம் ஈட்டலாம் எனவும் திட்டமிட்டுள்ளார்.


திட்டமிட்டதை போலவே வீடியோ வெளியானது. ஆனால், வழக்குகளையும் சந்திக்க நேர்ந்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே ஆணுறுப்பு வெட்டப்பட்டதாக வாதிடப்பட்டது. எனினும், ஆரோனின் ஆணுறுப்பு மீண்டும் அவரது உடலில் பொருத்தப்பட்டுவிட்டது.