கிளிநொச்சியில் குளமொன்றில் மீட்கப்பட்ட இளம் யுவதியின் சடலம்… நாட்டில் தொடர்ந்து நடக்கும் மர்ம கொலைகள்…!!

கிளிநொச்சியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு…!!

நாட்டில் அண்மை காலங்களில் தொடர் மர்ம மரணங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று கிளிநொச்சி பகுதியில் அம்பாள் குளத்தில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் குளத்தில் இவ்வாறு பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குளக்கட்டினை அண்மித்து ஒதுங்கியுள்ள சடலம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் 30 வயது மதிக்க தக்கவர் என்பதுடன், பாதணிகள், கைப்பை ஆகியனவும் சடலத்துடன் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டுள்ளனர். சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.