பெண்களை சீண்டும் நபர்களுக்கு கடும் நடவடிக்கை: கோட்டாபய அரசின் அதிரடி முடிவு..!!

பெண்களின் நலனுக்காய் அரசின் அதிரடி நடவடிக்கை..!!

தற்போது பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன அறிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள பெண்களுக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க அரசாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வீரப் பெண்கள் செய்த மகத்தான சேவையை அங்கீகரிப்பதற்காக நேற்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் இந்த விடயத்தை முன்வைத்துள்ளார்.

மேலும் இதன் போது போர்வீரர்களின் தாய் மற்றும் மனைவி உள்ளிட்டவர்கள் போரின் போது அனுபவித்த கஷ்டங்களையும் மன அழுத்தத்தையும் பார்க்கும்போது, அவர்கள் முழு தேசத்தின் மதிப்புக்கு உரியவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதோடு சேர்த்து, நாட்டின் பொருளாதாரத்தில் வெளிநாடுகளில் உள்ள பெண் தொழிலாளர்கள் அளிக்கும் பங்களிப்பு மகத்தானது என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.