வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா..!

வவுனியாவில் அதிகரித்து வரும் கொரோனா…

வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாறான முறையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அதன் முடிவுகள் நேற்றையதினம் வெளிவந்திருந்தது. அதனடிப்படையில் அங்கு பணியாற்றும் வவுனியா சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.