இலங்கையில் வானிலிருந்து பொழியும் கட்டிகள் ..! ஆச்சரியத்தில் மக்கள்..!!

வானிலிருந்து விழுந்த கட்டிகள்…

நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் தற்போது மழையுடனான வானிலை நிலவிவரும் நிலையில், சில இடங்களில் ஐஸ் கட்டிகள் வானத்திலிருந்து விழுந்துள்ளதாக அப் பிரதேச வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (08) மீரிகம மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இந்த ஐஸ் கட்டி மழை பெய்துள்ளது.

மேலும் மீரிகம, போதலே, சூதுகந்த, காமரன்கார ஆகிய பகுதிகளில் இவ்வாறு ஐஸ் மழை பெய்ததாக பிரதேச மக்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது வெளிப் பிரதேசங்களில் நின்ற பலருக்கும் தலையில் திடீரென்று ஐஸ் கட்டிகள் விழுந்ததால் சற்று நேரம் பரபரப்பு நிலவியுள்ளது.

சுமார் 15 நிமிடங்கள் வரையில் இந்த ஐஸ் மழை பெய்ததாகவும் பிரதேச மக்கள் மேலும் கூறியுள்ளனர்.