கட்டாய திருமண ஏற்பாடு… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

இந்தியா..

திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் இளம் பெண் தற் கொ லை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு ஜெயநகரைச் சேர்ந்தவர் சண்முகம்.இவருடைய மகள் பரிமளா (24) தனியார் நிறுவனததில் பணி புரிந்து வருகின்றார். தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிடவே அவரது தாய் கல்யாணி குடும்பத்தைக் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் பரிமளாவுக்கும், காட்பாடியை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஆனாலும் பரிமளாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து குடும்பத்தினரிடமும் அவர் தெரிவித்த நிலையில், அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்கும்படி கோரியுள்ளனர்.

இந்நிலையில் திருமண ஏற்பாடுகளை செய்வதற்கு தொடங்கிய போது பரிமளா ஏற்பாடுகள் எதுவும் செ.ய்.ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அவரின் பேச்சை, குடும்பத்தினர் பொருட்படுத்தாததால், வேதனை அடைந்த பரிமளா நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் தூக்குப்போட்டு த ற் கொ லை செய்துள்ளார்.

இதனை அடுத்து பரிமளாவை மீ ட் டு த னி யார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு, மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

அதன் போது அவரைப் சோதித்த மருத்துவர் அவர் முன்னரே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.