கணவர் மீது புகார் கொடுக்க வந்த பெண்ணை சீரழித்த இன்ஸ்பெக்டர்…! பொலீஸ் நிலையத்தில் 3 நாட்கள் நடந்த கொடூரம்..!!

இந்தியா…

இந்தியாவில் ராஜஸ்தானில் தனது கணவன் மீது புகார் கொடுக்க வந்த பெண்ணை மூன்று நாட்களாக பலாத்காரம் செய்து சித்திரவதை செய்த உதவி காவல் ஆய்வாளர்

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வரதட்சணை புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வின் பின்னணி என்ன?

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு கடந்த மார்ச் 2ம் தேதி அன்று திருமணமான 26 வயது பெண் ஒருவர் புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் பரத் சிங்க் (54aa) அப்பெண்ணை பாலியல் ரீதியாக அணுகியுள்ளார். மேலும், காவல் நிலைய வளாகத்திற்குள் தான் வசிக்கும் அறையில் அப்பெண்ணை அடைத்து வைத்து மூன்று நாட்களாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் ஜெய்ப்பூர் காவல் அதிகாரி ஜெனரல் ஹவாசிங் குமாரியாவை சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்ட பெண் அவர் தனது கணவர் மீது வரதட்சணை கொடுமை வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். பின்னர் நீதிமன்றத்தால் அந்த வழக்கு தீர்த்து வைக்கப்பட்டது. ஆனால், தற்போது அப்பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்கவே அதற்கு இவர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். அதனால், அப்பெண்ணை கணவரின் குடும்பத்தார் சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவன் மீது புகார் கொடுக்க அந்த பெண் மார்ச் 2ம் தேதி கேர்லி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்துள்ளார். அப்போது, ஸ்டேஷனில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் தன்னை மார்ச் 2ம் தேதியில் இருந்து மார்ச் 4ம் தேதி வரை அங்குள்ள அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் சம்மந்தபட்ட சப் இன்ஸ்பெக்டரை விசாரித்த காவல் அதிகாரிகள் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 [RAPE] இன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கைதான சப் இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று காவலர்கள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜெய்ப்பூர் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண்களுக்கு வீட்டில் மட்டுமல்ல காவல் நிலையத்திலும் பாதுகாப்பு இல்லை என்று நினைவுபடுத்தும் இதுபோன்ற செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. இதனாலயே பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்லவும் தயங்கி வருகின்றனர். குறிப்பாக வட மாநிலங்களில் பின்புலம் இல்லாத பெண்கள் எளிமையாக சூறையாடப்படுவது தொடர்கதையாகி வருவதால், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அங்கு கடுமையா