கழிவறை சென்ற பெண்ணிற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…! ஹொட்டலில் ஏற்பட்ட பரபரப்பு..!!

இந்தியா…

கழிவறைக்குள் சென்ற பெண்ணை ஜன்னல் வழியாக எட்டி பார்த்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த மக்கள்.

வட மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வரும் சூழலில் சில வட மாநிலத்தவர்கள் தென் மாநிலங்களில் பாலியல் தொந்தரவு கொடுக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தனியார் ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது.இங்கு கேரளாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உணவு சாப்பிடுவதற்காக வந்துள்ளது. இந்நிலையில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் ஹோட்டல் கழிவறைக்கு சென்றுள்ளார் .

அப்போது, யாரோ ஒரு வாலிபர் கழிவறையின் சுவற்றில் உள்ள ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அதை சுதாரித்துக்கொண்ட பெண் உடனே வெளியே வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து, எதற்காக எட்டி பார்த்தாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர், சாரி மேடம் என்று கூறவே, ஆத்திரமடைந்த பெண் விஷயத்தை தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

‘தகாத உறவில் எல்லை மீறாதே’ துடித்துக்கொண்டே சென்ற இளம்பெண் உயிர்! திருவள்ளூர் அதிர்ச்சி

பின்னர் வாலிபரை பிடித்து தரும அடி கொடுத்தவர்கள், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். விசாரணையில், அந்த வாலிபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நம்ஜித் என்பதும், அவர் அதே ஹோட்டலில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இதனிடையே, சம்பவ இடத்துக்கு போலீசார் வரும் வரை, வாலிபரை அந்த பெண் விடாமல் அடித்துக்கொண்டே இருந்ததால் ஹோட்டலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.