தனது நண்பனை கொ லை செய்து பூனைக்கு விருந்து வைத்த வாலிபர்…!!

நண்பனை கொ ன்று பூனைக்கு விருந்து வைத்த வாலிபர்!

கஜகஸ்தானில் தனது நண்பனை கொன்று பூனைக்கு உணவாக அளித்த நபரால் பெரும் பரபரப்பு.

நண்பரை வீட்டுக்கு வரவழைத்து அவரை குத்தி கொ லை செய்து பூனைகளுக்கு உணவாக அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தான் நாட்டில் உள்ள கரகண்டா பகுதியை சேர்ந்தவர் அர்மான். இவருக்கு வயது 33. இவர் தனது பக்கத்து வீட்டுக் காரரும், நண்பருமான டனியர் என்பவரை மது அருந்துவதற்காக வீட்டுக்கு அழைத்துள்ளார். இருவரும் இணைந்து வோட்கா அருந்தியுள்ளனர்.

சில மணி நேரங்களில் இருவருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் எல்லைமீறியதும் கிச்சனில் இருந்து கத்தியை எடுத்துவந்த அர்மான், அதை வைத்து டனியரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், அடுத்த மூன்று நாட்களில் டனியரின் உடலை துண்டு துண்டாக வெட்டி தெருவில் சுற்றித் திரியும் பூனைகளுக்கு உணவாக கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியு

டனியர் திடீரென காணாமல் போனதை கண்ட உறவினர்கள் போலீசாரிடம் புகாரளித்தனர். அதன்பின்னர், டனியர் கடைசியாக அர்மானின் வீட்டுக்கு சென்றதை கண்டறிந்த போலீசார், அர்மான் வீட்டில் சோதனை நடத்தினர்.

அர்மான் வீட்டில் டனியரின் உடல் பாகங்களில் மீதி மட்டும் கிடைத்துள்ளது. இதன் பின்னர் அர்மான் கைது செய்யப்பட்டு அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.