குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்..!

குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட நபர்..!

குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினால் மனைவி பிள்ளைகள் தாக்கியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவ்த்தில் ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பாரதி வீதியினைச் 38 வயதுடைய சேர்ந்த கணேஷ் குணராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபருக்கும் மனைவி பிள்ளைகளுக்கும் இடையில் நேற்று இரவு ஏற்பட்ட மோதலினால் மனைவி பிள்ளைகள் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் க.ஜீவராணி சம்பவ இடத்தினை பார்வையிட்ட பின்னர், உயிரிழந்தவரின் பிள்ளைகள் மற்றும் மனைவி ஆகியோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.