கொழும்பில் எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்பு…!நாட்டில் தொடர்ந்து நடக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

கொழும்பில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு..!

கொழும்பில் எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொஹுவலை – கலுபோவில பகுதியில் வெகன் ஆர் ரக காரொன்றில் குறித்த வர்த்தகரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த சடலம் நேற்றிரவு 11.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த கார் முழுவதுமாக தீக்கிரையாகியிருந்ததாகவும், மற்றும் உயிரிழந்த நபரின் சடலமும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் 33 வயதுடைய கலுபோவில – பாத்திய மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் கொஹுவலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.