பெற்ற பிள்ளையை கூட பார்க்க விடவில்லை தந்தை எடுத்த விபரீத முடிவு…! இறுதியாக எழுதிய கடிதம்..!!

இந்தியா…

இந்தியாவில் மனைவி மற்றும் மாமியார் துன்புறுத்தியதால் கணவன் த ற் கொ லை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் வடோதராவை சேர்ந்தவர் ஷிஷிர் தர்ஜி. இவருக்கும் மோனிகா என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ள நிலையில் ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தர்ஜி இரு தினங்களுக்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு த ற் கொ லை செய்து கொண்டுள்ளார்.

மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், என் மனைவி, மாமியார், மாமனார் டார்ச்சர் மற்றும் துன்புறுத்தலால் தான் நான் த ற் கொ லை முடிவை எடுக்கிறேன் என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து தர்ஜி தாய் கூறுகையில், தர்ஜியின் மனைவி மோனிகா ஒரு ஆண்டாக தனது பெற்றோர் வீட்டில் தான் வசித்து வந்தார்.

தனது குழந்தையை காண தர்ஜி சென்ற போது கூட அவர்கள் அதற்கு கூட அனுமதிக்கவில்லை.

மேலும் தொடர்ந்து என் மகனை துன்புறுத்தி வந்தனர் என கூறியுள்ளார்.

பொலிசார் இனி தான் மோனிகா மற்றும் அவர் பெற்றோரிடம் விசாரணையை துவங்கவுள்ளனர்.மேலும் தர்ஜியின் இறுதிச்சடங்கு தொடர்பான விடயங்கள் முடிந்த பின்னர் அவர் தாயாரிடம் விசாரணை நடத்தி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.