மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கை வருகிறது…, வெளியான செய்தி…!!

இலங்கைக்கு வரும் தடுப்பூசிகள்…

கொரோனா தொற்றை தடுப்பதற்காக இலங்கைக்கு கிடைத்துள்ள கொவிட் தடுப்பூசி தற்போதைய நிலையில் 750,000 பேருக்கும் அதிகமானோருக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினத்தில் மேலும் 8,323 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இதுவரை 752,298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா கொவிசீல்ட் தடுப்பூசியின் மேலும் 5 இலட்சம் டோஸ்கள் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.