அமசோனில் விற்பனையாகும் இலங்கையின் தேசியக்கொடி அச்சிடப்பட்ட கால் துடைப்பான் மற்றும் செருப்புக்கள்…சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விடயம்..!!

இலங்கை தேசிய கொடி….

இலங்கையின் தேசியக் கொடி கால் துடைப்பானாக விற்பனை செய்யப்படுகின்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல இலங்கையின் தேசியக் கொடியின் சின்னம் அடங்கிய செருப்புகளும் விற்பனைக்காக இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

உலகின் மிகவும் பிரபலமான இணைய வணிக நிறுவனமாகிய அமசோன் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ விற்பனை தளத்தில் இலங்கையின் தேசியக் கொடியின் சின்னம் அடங்கிய கால் துடைப்பான்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் விலை 12 அமெரிக்க டொலராகும். இலங்கையின் ரூபாவில் இது இரண்டாயிரத்திற்கும் அதிகமாகும்.

இந்நிலையில் இலங்கை தேசிய கொடியின் அமைப்பில் கால் மிதி தயாரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் இலங்கையர்கள் கடுமையான கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

குறித்த விற்பனை விளம்பரங்கள் இணைய வழி ஊடாக குறித்த கால் மிதிவெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே, இது நாட்டின் தேசிய கொடியை அவமதிக்கும் செயற்பாடு மாத்திரமின்றி , நாட்டு மக்களுடைய மனங்களையும் புண்படுத்தும் செயற்பாடு என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.