கொழும்பில் நகரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட தொடர்மாடி குடியிருப்பு!!

நாட்டில் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்ட பிரம்மாண்டமான தொடர்மாடி….

நாட்டின் நிர்மாணத்துறையின் புதிய அனுபவத்துடன், புதிய படைப்பாக நிர்மாணிக்கப்பட்ட கொம்பெனித்தெருவில் உள்ள எல்டெயார் (Altair) தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் தலைமையில் இந்த திட்டம் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

68 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் எல்டெயார் தொடர்மாடி குடியிருப்பு திட்டம் 230 மீற்றர் உயரம் கொண்டதாகும்.

மேலும் இது தவிர 4 விதமான 407 அதிசொகுசு வீடுகளும் அவற்றில் அடங்குகின்றன.