நாட்டில் இடம்பெற்ற மூன்று கோர விபத்துக்கள்…. மூவர் பலி…!!

நாட்டில் அதிகரித்து வரும் விபத்து….

நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்துக்களில் பாடசாலை ஒருவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரவ்பொத்தானை – கபுகொல்லாவ பிரதான வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயதுடைய மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் கம்பஹா – கிரிந்திவெல வீதியின் திக்கந்த சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் ஒன்றுடன் மோதியதில் 28 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று இரவு ஆணமடுவ – நவகத்தேகம வீதியில் இடம்பெற்ற விபத்தில் 37 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.