நீராடச் சென்ற இருவரை காணவில்லை…! தொடரும் தேடுதல் நடவடிக்கை..!!

நிராடச் சென்ற இருவர் மாயம்..!!

மஹவெல பொலிஸ் பிரிவில் அங்கந்த மின் உற்பத்தி நிலையத்துக்கு அருகில் குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

நேற்றைய தினம் முற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் உயிர்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் பிரதேசவாசிகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் 16 வயதுடைய மாணவன் மற்றும் 26 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவ்வாறு காணாமல் போனவர்கள் தலுபோத்தகம பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.