உயிருடன் எரிந்து சாம்பலான நபர்..!! வீதியில் நடந்த கொடூரம்…!!

இந்தியா…

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் இரண்டு லொறிகள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி ஒருவர் உயிருடன் எரிந்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தின் மேட்சல் மாவட்டத்தில் ஷமிர்பேட்டை ராஜீவ்காந்தி சாலையில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகத்தின் சேலம் பகுதிக்கு செல்லும் ஒரு லிறியை முந்திச்செல்ல முயன்ற ஒரு லொறி, இன்னொரு லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோதிய வேகத்தில் இரு லொறிகளும் தீ பற்றி எரிய, அதில் பயணம் செய்த ஒருவர் தப்பிக்க முடியாமல் நெருப்பில் சிக்கி உயிருடன் எரிந்து இறந்துள்ளார்.

இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், சில மணி நேரம் போராடி நெருப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.