பெற்ற பிள்ளைகளை நரபலி கொடுத்த கொடூர தாய்…!! மூடச் செயலால் அதிர்ந்து போன அதிகாரிகள்..!!

இந்தியா…

இந்தியாவில் ஒரு பெண் பெற்ற பிள்ளைகளை நரபலி கொடுக்கப்போவதாக தகவல் வந்துள்ளது.. இதை கேட்டதுமே அதிகாரிகளுக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்துள்ளது பொதட்டூர்பேட்டை.. இங்கு வசித்து வருபவர் ஜெயந்தி. 34 வயசாகிறது.. கல்யாணம் ஆகிவிட்டது.. 17 வயதில் 2 மகள்களும், 15 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.
ஜெயந்தி ஒரு பூசாரியாம்.. காளியை வழிபட்டு வருபவர்.. திடீர் திடீர் என சாமியாடுவாராம்.. அப்படி சாமி வந்துவிட்டால் குறி சொல்லுவார்..

இந்த குறி சொல்வதில் ஒருசில விதிகளை கடைப்பிடித்து வந்துள்ளார்.. குறி சொல்வதானால், தன்னுடைய சொந்த கிராமமான புச்சிரெட்டிபள்ளிக்கு செல்வாராம் ஜெயந்தி. வாரத்தில் 3 நாள், அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு இங்குதான் வந்துவிடுவார்,. குறி சொல்லும்போது, திடீரென உயிருள்ள ஒரு கோழியின் தலையை நறுக்கென கடிப்பாராம்.. ஜெயந்தியிடம் குறிகேட்க அக்கம் பக்க கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்து போவார்கள்.

அப்படித்தான், கடந்த சனிக்கிழமை ஜெயந்தி சாமி ஆடினார்.. பிறகு குறி சொன்னார்.. தன்னுடைய வீட்டில் புதையல் இருப்பதாக அவரே அவருக்கு குறி சொல்லி உள்ளார்.. அதற்கு பிறகு சுயநினைவுக்கு வந்துள்ளார்.. உடனடியாக தன் வீட்டில் இருப்பதாக சொன்ன அந்த புதையல் மீது ஆசை வந்துள்ளது.. அந்த புதையலை எடுக்க வேண்டும் என்றால், பிள்ளைகளை உயிருடன் நரபலி தர வேண்டும் என்று முடிவெடுத்தார்.. 3 பிள்ளைகளையும் கொல்ல முடிவு செய்தார்.. இந்த தகவல்தான் காட்டுத்தீயாய் பரவி குழந்தைகள் நல அதிகாரிகளின் காதில் எட்டி உள்ளது.

இதைக்கேட்டதும், அதிகாரிகள் ஜெயந்தி வீட்டுக்கு விரைந்து வந்தனர்.. விசாரணையும் ஆரம்பித்தனர்.. ஆனால், அப்படி ஒரு நரபலியும், பூஜையும் தான் செய்யவில்லை என்றும், யாரோ தவறான தகவலை தந்திருப்பதாகவும் அதிகாரிகளிடம் வாதிட்டுள்ளார்.. எனினும் அதிகாரிகள் ஜெயந்தியின் பேச்சை நம்பவில்லை.. வீட்டை சோதனை செய்தனர்.. அப்போது ஜெயந்தியின் டிரஸ்ஸில் ரத்தக்கறை இருப்பதையும் பார்த்தனர்..

அதை பற்றி கேட்டதற்கு சாமியாடும்போது கோழியின் கழுத்தை கடித்து ரத்தம் குடித்துவிட்டேன்.. அந்த கறை டிரஸ்ஸில் பட்டுவிட்டது என்று சொல்லி உள்ளார். ஆனால், எந்த நேரத்தில் ஜெயந்திக்கு சாமி வந்துவிட்டாலும், அது அவரது பெற்ற பிள்ளைகளுக்குதான் ஆபத்து நினைத்து, 3 பிள்ளைகளையும் அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.. ஜெயந்திக்கு மெடிக்கல் கவுன்சிலிங் தரவும் ஏற்பாடு செய்துள்ளனர். திருவள்ளூர் போலீசாருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படவும், விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறே ஆந்திராவிலும் சில நாட்களுக்கு முன்பு நரபலி சம்பவம் நடந்தது.. பேராசிரியர்களான பெற்றோரே, தங்களது வயதுக்கு வந்த 2 பெண்களையும் நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. நம் ஊரிலும் இதுபோல அடிக்கடி நரபலிகள் தலைதூக்கவும் ஆரம்பித்துள்ளது.. 10 மாசம் கருவில் சுமந்து பெற்றோம் என்ற உணர்வினை, ‘பணத்தாசை’ விழுங்கி விடுகிறது… மூடநம்பிக்கை கண்ணை மறைத்துவிடுகிறது..!