திருகோணமலையில் கடலில் மாயமான யாழ். இளைஞர்கள்..! ஒருவர் மட்டும் சடலமாக மீட்பு…!!

திருகோணமலை நீராடச்சென்ற இளைஞர்கள் மாயம்..!

Drowning

திருகோணமலை- நிலாவெளி கடலில் குளிக்க சென்ற இளைஞர்களில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் -வலிகாமம் தெற்கு குப்பிளான் பகுதியைச் சேர்ந்த 21 வதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, 21 வயதான இளைஞர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் சிலர் வருகை தந்ததாகவும் சமய வழிபாடுகளை முடித்து விட்டு வீட்டுக்குச் செல்வதற்கு முன்னர் நிலாவெளி கடற்கரை பகுதிக்கு நீராடச் சென்றபோது இருவர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.