நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி…!

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி…!

இலங்கையில் மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று (13) முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவத்றகான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மேல் மாகாண முதியோர் இல்லங்களில் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.