வவுனியாவில் சிற்றூழியர் ஒருவர் திடீர் மரணம் ! வெளியான காரணம்..!!

வவுனியாவில்…

வவுனியாவில் வலிப்பு நோய் காரணமாக செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பிரதேச சபை சிற்றூழியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையில் சிற்றூழியராக கடமையாற்றும் மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 36) என்பவருக்கு வீட்டில் இருந்த போது திடீரென வலிப்பு நோய் வந்துள்ளது.

இதன் பின்னர் குறித்த நபரை செட்டிகுளம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை இடம்பெற்று நேற்றைய தினம் (12) சடலம் அவரது குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.