வாகன இறக்குமதியாளர்களுக் ஓர் முக்கிய தகவல்… …அறிமுகமாகும் புதிய திட்டம்..!

நிதி அமைச்சு வெளியிட்ட தகவல்…!

நாட்டில் வாகன இறக்குமதியாளர்களுக்கு ஒதுக்கீடு முறையை (Quota) அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து வாகன இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக நிதி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் எஸ்.ஆர் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

மேலும் 1500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவே, கோட்டா முறையினூடாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்குரிய விலைமனுக்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரத்தியேக பயன்பாட்டிற்குரிய வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.