வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்…!

தற்போது கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை தனிமைப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அடுத்த திங்கட்கிழமைக்குள் இந்த விடயத்தில் ஒரு தீர்மானத்தை எடுப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை எடுத்து 7 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்ட போதும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இது தொடர்பில் ஆராய்வதாக குறிப்பிட்டுள்ளார்.