சிறைச்சாலைகளில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று..!

மீண்டும் தீவிரம் அடையும் கொரோனா…

இலங்கையில் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், புதிதாக 65 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு ) சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த கொவிட்-19 வைரஸ் கொத்தணியின் ஊடாக வைரஸ் தொற்றுக்குள்ளகுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்த போதிலும் , தற்போது மீண்டும் இது அதிகரித்துச் செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாத்திரம் புதிதாக 65 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்போது சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

சிறைச்சாலைகளில் இதுவரையில் 160 அதிகாரிகள் உட்பட 5 ஆயிரத்து 125 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 158 அதிகாரிகளும் , 4 ஆயிரத்து 702 கைதிகளும் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் இரு அதிகாரிகளும் , 250 கைதிகளும் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரையில் 11 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.