புதிய வைரஸால் இலங்கையில் மரணங்கள் கூடும்- விடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை…!!

புதிய வைரஸினால் ஆபத்து…

தென் ஆபிரிக்காவில் தற்போது பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையில் பரவினால் எதிர்காலத்தில் தொடர் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆபிரிக்காவில் பரவிய வைரஸ் தொற்று இங்குள்ள வைரஸ் தொற்று வகைக்கு இணையானது எனவும் அது மிக வேகமாக மற்றவர்களுக்கு பரவக்கூடும் எனவும் புதிய அலை உருவாகும் வாய்ப்பு உள்ளதா குறிப்பிட்டார்.

மேலும், அவசர சிகிச்சைகளுக்கான தேவை அதிகரிக்கும் எனவும் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தற்போது நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படலாம். அதேபோன்று, தற்போதைக்கு பயன்படுத்தப்படும் Covishield தடுப்பூசிக்கும் சிறந்த பாதுகாப்பு உறுதி அளிக்கப்படாது.

ஏற்கனவே தொற்றுக்குள்ளானவரின் இரத்தத்தை இந்த வைரஸ் தன்மை தொற்றியவர்களுக்கு பயன்படுத்த முடியாது போகும் என விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன மேலும் தெரிவித்தார்.