முதியவருக்கு திருமண ஆசை காட்டி மோசம் செய்த இளம் பெண்… பறிபோன 1.3 கோடி…!!

இந்தியா…

இந்தியாவில் வயதானவரிடம் திருமண ஆசை காட்டி இளம் பெண் ஒருவர் நெருக்கமாக பழகி, அவரிடம் இருந்து 1.3 கோடி ரூபாயை ஏமாற்றி பறித்துச் சென்றுள்ளார். இந்த புகாரை ஏற்று மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மும்பையில் மல்வானி பகுதியில் ஜெரோன் டி சவுசா என்ற முதியவர் வாழந்து வருகிறார். இவருடைய தந்தை மும்பை உள்ளூர் விமான நிலையம் அமைந்துள்ள சான்டாகிரஷ் பகுதியில் வாங்கி வைத்த நிலம் ஒன்றை கடந்த 2010 ஆண்டு ஜெரோன் விற்பனை செய்தார்.


அந்த பணத்தை நிதி நிறுவனம் ஒன்றில் 4 முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளார். அதை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஒரு நாள் வங்கிக்கு சென்று வரும்போது அங்கு பணிபுரிந்த ஷாலினி சிங் என்ற இளம் பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நட்பு பாராடிட்டிய இளம் பெண், ஒரு கட்டத்தில் நெருங்கிப் பழகி தொடங்கினார். தனக்கு துணையாக ஷாலினி இருப்பார் என்று ஜெரோன் நம்பும் அளவிற்கு நடந்து கொணடுள்ளார் அந்த பெண். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாகவும், கடைசி காலத்தில் உடனிருந்து பார்த்துக் கொள்வதாக ஷாலினி நம்பிக்கை அளித்துள்ளார்.

ஷாலினி கூறியதில் உச்சிகுளிர்ந்து போன ஜெரோன் அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, ஷாலினியும், ஜெரோனும் பூங்கா, ரெஸ்டாரண்ட், மால் என ஜாலியாக சென்று நாட்களை கழித்துள்ளனர். ஒரு நாள் ஷாலினி தொழில் ஒன்றை தொடங்குவதற்காக ஜெரோனிடம் பணம் கேட்டுள்ளார். வரும் லாபத்தை சரிசமமாக பிரித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

அவரின் பேச்சைக் கேட்ட ஜெரோன் தன்னிடம் இருந்த 1.3 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்திருக்கிறார்.. பணம் தனது கைக்கு வந்து சேர்ந்த பின் திடீரென ஷாலினி ஜெரோனின் தொடர்பை முழுமையாக கைவிட்டுவிட்டார்.. இதில் அதிர்ச்சியடைந்த ஜெரோன் பலமுறை முயன்றும் பேசமுடியவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், மும்பை அந்தேரி போலீஸ் ஸ்டேசனில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ஷாலினி சிங் என்ற பெண் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி காதலித்தார். இருவரும் வெளியில் சென்று சுற்றினோம். தொழில் செய்தவாக கூறி ரூ.1.3 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு ஷாலினி தலைமறைவாகிவிட்டார்.. தன்னுடன் இறுதி நாட்களில் செலவிடுவதாக கூறிவிட்டு, தற்போது அவருடைய சொந்த கிராமத்தில் சென்று வேறொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தைமீட்டு தர வேண்டும் என்று ஜெரோன் புகாரில் கூறியுள்ளார்.இதனை போலீசார் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.