இந்த குக் வித் கோமாளி பிரபலம் யாருன்னு தெரியுதா.? க்யூட் புகைப்படம்..!

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ஷிவாங்கி. இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சியில் கோமாளியாக வருகிறார். இந்நிகழ்ச்சியில் இவரும் புகழும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் மற்றும் ரகளைகளை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது

மேலும், இவர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள அஸ்வினுடன் இவர் செய்யும் சேட்டைகள் ரசிக்கும்படியாக உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியை ஷிவாங்கிகாகவே நிறைய பேர் பார்க்கின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தது தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

தனது சிறுபிள்ளை தனத்தால் அனைவரையும் மெய் மறந்து சிரிக்க வைக்கும் ஷிவாங்கி தன் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது அதில் அவர் சுட்டி பெண்ணாக செம க்யூட்டாக உள்ளார்.