இலங்கை பொலிஸாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி டுபாயில் மரணம்..!!

பொலிஸாரால் தேடப்பட்ட குற்றவாளி மரணம்…!

இலங்கையில் பொலிஸாரினால் தேடப்படடு வந்த முக்கிய குற்றவாளி டுபாயில் உயிரிழந்துள்ளார். கைது செய்வதற்காக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த பாரிய குற்ற செயல்களுக்கு தொடர்புடையவர் என கருதப்படும் கெசெல்வத்தை தினுக என்பவர் உயிரிழந்துள்ளார்.

டுபாயில் நிகழ்ந்த விருந்தின் போது ஏற்பாடு மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் இந்த தகவலை இராஜதந்திர ரீதியில் உறுதி செய்வதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு போ.தை.ப்.பொ.ரு.ள் க.டத்தும் வலையமைப்பை நடத்தி வரும் கெசெல்வத்தை தினுக, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்த பின்னர் கெசெல்வத்தை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.