நாட்டில் இனி தென்னை மரம் வெட்டுவோருக்கு தண்டனை..?

தென்னை மரம் வெட்டுவோருக்கு தண்டனை….

நாட்டில் மரங்களை வெட்டுவதற்கெதிராக உள்ள சட்டத்தில் தென்னை மரத்தை வெட்டினால் தண்டனை வழங்குவதற்கான திருத்தம் கொண்டுவரப்படவிருப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தினை கம்பஹா – நைவல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அண்மைய நாட்களாக தேங்காய் விலை அதிகரித்துச் சென்றமை, கட்டிட மற்றும் இதர தேவைகளுக்காக தென்னை மரங்களை வெட்டும் நடவடிக்கை அதிகரித்துள்ளமை போன்ற விடயங்களை அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.