பாடசாலை மாணவிக்கு கொரோனா; உடனடியாக மூடப்பட்ட பாடசாலை…!!

பாடசாலை மாணவிக்கு கொரோனா…!

நாடளாவிய ரீதியில் இன்று பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஆரம்ப பிரிவு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உடனடியாகவே பாடசாலையின் ஆரம்ப பிரிவு மூடப்பட்டது.

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் ஆரம்பபிரிவு மாணவிக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மாணவியின் வகுப்பிலுள்ள 40 மாணவர்களுக்கு இன்றைய தினம் பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

இதேவேளை நோர்வூட் பிரதேசசபைக்கு கீழ் இயங்கும் நோர்வூட் பிரதேச பொது நூலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கும் அவருடைய பிள்ளைக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது.