வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட செய்தி..!

தினேஷ் குணவர்தன….

தற்போதைய அரசாங்கத்தினையும் அதன் திட்டங்களையும் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்று வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழக்கும் வகையில் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் செயற்படக் கூடாது என்று குறிப்பிட்ட அமைச்சர், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் பிராந்தியத்தில் தொடங்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது பெரும்பாலான மக்கள் இந்த அரசாங்கத்தை ஆதரித்துள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்தினையும் அதன் திட்டங்களையும் பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஒற்றையாட்சி நிலையை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.