நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்..!

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா…

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்புபவர்கள் தொடர்பில் இன்று திங்கள்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்குவதற்கான காலத்தை ஏழு நாட்களாக குறைப்பது குறித்தே இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்குள்ளாகும் போது எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் இன்று நடைபெறும் கொரோனா பரவலை தடுப்பதற்கான குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்திற்கான கோரிக்கையினை இராணுவத் தளபதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.