நாட்டில் மீண்டும் மாவட்டங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளா..?

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு …

இலங்கையில் வருகின்ற பண்டிகை காலத்தை அடிப்படையாக கொண்டு நாட்டில் விசேட பயணக்கட்டுபாடுகளை அமுல்படுத்துவது அவசியமானதாக காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது குறித்த சங்கத்தின் ஊடகபேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.