மீன் தொட்டியில் தவறி விழுத்து பலியான 1 வயது குழந்தை..!!

மீன்தொட்டியில் விழுந்த குழந்தை பலி…

வீட்டில் இருந்த மீன் தொட்டியில் தவறி விழுந்து குழந்தையொன்று நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் 2.35 மணியளவில் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிரியாகம, கஹல்ல, ஆதியாகல பிரதேசத்தை சேந்த ஒரு வயதுடைய குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.