ஓட்டமாவடி ஆற்றிலிருந்து ஆண்ணொருவரின் சடலம் மீட்பு..!!

ஓட்டமாவடியில் சடலம் மீட்பு..!

இன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட நபரொருவரின் சடலம் ஓட்டமாவடி ஆற்றில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தோணி ஒன்றில் சென்ற நபரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் மரணமடைந்த நபர் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சேகு இஸ்மாயில் சப்ராஸ் (மீனி) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.