டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இலங்கை அஞ்சல் திணைக்களம்..!

டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரைகள்…

தற்போது இலங்கை அஞ்சல் திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரைகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் இந்த முத்திரைகள் அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்லாவின் ஆதரவின் பேரில் வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது

இதற்கமைய QR குறியீட்டைக் கொண்ட 25 ரூபா பெறுமதியான டிஜிட்டல் முத்திரைகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

QR குறியீட்டை ஸ்கேன் செய்து, முத்திரை பணியகத்தின் இலங்கை அஞ்சல் வலைத்தளத்தை அணுகுவதன் மூலம் முத்திரை தொடர்பான அல்லது தொடர்புடைய கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

மேலும் இந்த நிகழ்வின்போது சிறப்பு பாதுகாப்பு அடையாளத்துடன் 500 ரூபா பெறுமதியான புதிய தபால் முத்தரையும் வெளியிடப்பட்டமை குரிப்பிடத்தக்கது.

மேலும் 1857 ஏப்ரல் முதலாம் திகதி நாட்டின் வரலாற்றில் முதல் முத்திரை வெளியிடப்பட்டது, இன்று வரை இலங்கை தபால் துறை பல்வேறு சந்தர்ப்பங்களுடன் ஏராளமான நினைவு முத்திரைகளை வெளியிட்டுள்ளது.

இதேவேளை 1857 ஏப்ரல் முதலாம் திகதி இலங்கை வரலாற்றில் முதல் முத்திரை வெளியிடப்பட்ட நிலையில் இன்று வரை இலங்கை தபால் துறை பல்வேறு சந்தர்ப்பங்களுடன் ஏராளமான நினைவு முத்திரைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.