பறிபோகும் அபாயத்தில் கிளிநொச்சி – உருத்திரபுரம் சிவன் கோவில்!

கிளிநொச்சி

கிளிநொச்சி – உருத்திரபுரம் சிவன் கோவில் பகுதியில் புத்தர் சிலை இருப்பதாக கூறி தொல்லியல் அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 23ம் திகதி அவ்விடத்தில் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனை முன்னிட்டு நேற்றைய தினம் அங்கு தொல்லியல் திணைக்களத்தினர் துப்பரவுப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை தேசிய மரபுரிமைகள், கலை கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க எதிர்வரும் 23ம் திகதி அகழ்வுப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.