சொந்த அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பி கைது..! கோபத்தால் அரங்கேறிய கொடூரம்..!!

தமிழ்நாடு…

தமிழகத்தில் சேலம் அருகே சொத்து தகராறில் அண்ணனை சு.ட்.டு.க்.கொ.ன்.ற தம்பி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை அடுத்த புத்தூர் பகுதியில் வசிப்பவர் செல்வம். இவர் வெள்ளி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சந்தோஷ் என்ற தம்பி உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அண்ணன், தம்பி இருவருக்கிடையே சொத்து பிரச்சினை காரணமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும், அப்போது தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் செல்வத்தை சந்தோஷ் சுட்டு கொ.லை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை நடந்த குறித்த கொ.லை சம்பவத்தால் கொண்டலாம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை ஆய்வு செய்து பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சந்தோஷை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், ஆத்தூர் பகுதியில் சந்தோஷ் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சந்தோஷை பிடித்து போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி எழிலரசி: ஒரு சபதம், பல கொலைகள், புரட்டியெடுக்கும் உயிர் பயம்

செல்வத்தை கொ.லை செய்ய பயன்படுத்திய நட்டு துப்பாக்கி யாருடையது? கொ.லையின் உண்மை பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சனைக்காக சொந்த அண்ணனையே துப்பாக்கியால் சுட்டு கொ.லை செய்த தம்பியின் செயல் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.