பள்ளி சிறுமிக்கு உற்சாகமாக தாலி கட்டும் இளைஞன்..! தற்போது ஊடகங்களில் வைரலாகும் வீடியோ..!!

இந்தியாவில்….

இந்தியாவில் பள்ளி சீருடையில் உள்ள சிறுமிக்கு வாலிபர் தாலிகட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

பள்ளி சீருடையில் வகுப்பறையிலேயே 2k கிட்ஸ்கள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வுகளை பலமுறை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், பள்ளி சீருடையில் உள்ள சிறுமிக்கு வாலிபர் ஒருவர் கோயிலில் வைத்து தாலி கட்டும் வீடியோ வைரலாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வழக்கம்போலவே அந்த வீடியோவை அங்கிருந்த ஒருவர் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குன்னூரைச் சேர்ந்த கவுதம் என்பவர் சிறுமிக்கு தாலி கட்டுவதும், அதனை ஏதோ சாதித்ததை போல அந்த சிறுமி பரவசத்துடன் ஏற்றுக்கொண்டு குதூகளிப்பதையும் பார்க்கப்பட முடிகிறது.

மேற்கண்ட வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருவதால், அதுகுறித்து நீலகிரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பெரும்பாலான காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக காதல் இளசுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி அவர்களுக்கு பேரிடியை கொடுத்துவருகிறது. முன்பெல்லாம் பள்ளி படிப்பை முடித்ததும் மகள் தடம் மாறிவிடக்கூடாதென்ற பயத்தில் பெற்றோர்கள் இருந்து வந்தனர்.

ஆனால், இப்பொழுது ரெட்டை சடை போட்டுகொண்டு பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் மீதே பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதென்றால் இதுபோன்ற சம்பவங்களே அதற்கு சான்று.