பிரசவத்திற்கு சென்ற பெண்ணிற்கு வைத்தியசாலையில் நடந்த கொ.டு.மை..! தாய்யின்றி தவிக்கும் சி.சு…!!

இந்தியா….

பரமன்குறிச்சி அருகே பிரசவத்தை அடுத்து கர்ப்பிணி உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சியைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி வளர்மதி. இவருக்கு வயது 32. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், வளர்மதி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் வளர்மதியை பரமன்குறிச்சி சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், வளர்மதிக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் வளர்மதியின் உடல்நிலை மோசமாகியுள்ளது. பின்னர் அவரை அங்கிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பரமன்குறிச்சி சுகாதார மையத்தையும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையையும் முற்றுகையிட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பை அறிந்து திருச்செந்தூர் துணை ஆட்சியர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.

அதன் போது, பரமன்குறிச்சி சுகாதார மையத்தில் வளர்மதிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுவிட்டதாகவும், திருச்செந்தூர் மருத்துவமனையில் அவரது கர்ப்பப்பையை மருத்துவர்கள் அகற்றியதாகவும் துணை ஆட்சியரிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்மந்தப்பட்ட செவிலியர், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், வளர்மதியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை குறித்து தமிழக அரசிடம் பரிந்துரை செய்கிறேன் என தனப்பிரியா கூறியதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.