மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டியில் பணித்தவருக்கு திடீரென நேர்ந்த சோகம்..!!

மட்டக்களப்பில்….

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் துவிச்சக்கர வண்டி விபத்தில் பிரதேசவாசி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவத்தில் தும்பங்கேணி, சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த கனகரெத்தினம் கிருபைநாயகம் (வயது 64 ) என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

களுவாஞ்சிகுடியிலுள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து நேற்று இரவு தும்பங்கேணி, சுரவணையடியூற்றிலுள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் வீதியில் விழுந்து வீதியின் ஓரத்தில் நீர் குழாய் பதிப்பதற்காக வெட்டப்பட்டிருந்த குழிக்குள் விழுந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில், களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவானின் உத்தரவில் சம்பவ இடத்துக்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் இன்று சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

இதன் பின்னர் சம்பவம் தொடர்பாக, தடயவியல் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.