கச்சதீவு பறிபோவதாக வெளியான தகவல்? இந்தியா வெளியிட்டுள்ள செய்தி..!

கச்சதீவு விவகாரம்…

கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து பறிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் குறிப்பிட்டுள்ளார்.

இராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து வெளியிடும் போது,

கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்டெடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருதுடன், இராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்விடயத்தில் தமிழகத்திற்கு சாதகமான நிலையே ஏற்படும் எனவும், இது தொடர்பாக இலங்கை அரசுடன் நமது வெளியுறவுத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஆழ்கடல் மீன்பிடி திட்டமும், தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறதாகவும் இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் இதன்போது கூறியுள்ளார்.